நீண்டகாலமாக 14 வயது சிறுமியொருவரை பணத்திற்காக பாலிய தொழில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுமியின் உறவு பெண் ஒருவரும், பணத்தை வழங்கி சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரும், மருதானை பகுதியைச்
சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை அவரின் உறவினர் ஒருவர் பலவந்தமாக பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.










