25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரும் தொழிற்சங்கம்!

கட்டுநாயக்க விமான நிலைய இலங்கை சுதந்திர சேவையாளர் தொழிற்சங்கம் இன்று (11) ஊழியர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது 25,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 11 விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அந்த விடயங்களை விமான நிலைய அதிகார சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்திற்குள் குறித்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் தலைவர் எம்.டபிள்யூ.டி.முஹந்திரம் தெரிவித்துள்ளார்.

குறித்த கோரிக்கைகளுள் மத்தள விமான நிலைய எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பாதுகாத்தல் மற்றும் விமான நிலைய வாகன நிறுத்துமிடங்களை மீளப் பெறுதல் உள்ளிட்ட விடயங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles