நாட்டின் பல பாகங்களில் திடீர் மின் தடை!

நாட்டின் பல பாகங்களில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை,  நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

கடந்த டிசம்பர் முதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்றைய தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி இன்று மீண்டும் செயலிழந்துள்ளது.

இதனால் தேசிய மின் கட்டமைப்பில் 270 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மின்சார விநியோகத் தடை ஏற்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles