பொரளையில் உள்ள அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைகளை மேற்பார்வையிடுவதற்கு சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப் பீரிஸை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா ஆகியோருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.










