லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , லுணுகலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை (14/02) சுமார் 12 லட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் எவரும் இல்லாத சமயம், வீட்டின் பின்புறமாக உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டே பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரிசி வியாபாரி ஒருவரின் வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் லுணுகலை பொலிஸார் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ராமு தனராஜ்










