நாடளாவிய ரீதியில் இன்று சுழற்சி முறையில் நான்கரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமையாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னதாக வெளியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி முறையில் 4.40 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய குழுக்களுக்கு குறித்த காலப்பகுதியில் 4.30 மணித்தியால மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.
பிற்பகல் 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை இவ்வாறு சுழற்சி முறையில் குறித்த மின்வெட்டு அமுலாகவுள்ளது.
