“நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் உயர்த்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இஸட் ஸ்கோர் முறைமை இதில் தாக்கம் செலுத்தும்.
அத்துடன், ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறான நேரத்துக்கே மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்யலாம். எனவே, மார்ச் 5 ஆம் திகதிவரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
