” அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” – என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிராம மட்டத்தில் குறைபாடுகளை ஆராய்ந்துத் தகவல்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களினால் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான விசேட சந்திப்பின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் மண் பரிசோதனைக்குத் தேவையான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது குறிப்பிட்டுள்ளார.
அமைச்சர் சமல் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஆளுநர்கள், அமைச்சுக்கள், மாகாண மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
