காணி அபகரிப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்துக்கு முன் தமிழ் எம்.பிக்கள் போராட்டம்

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அவர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென. இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles