ரயில் மோதி யாழில் யுவதி பலி!

யாழ். கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி யுவதியொருவர் பலியாகியுள்ளார்.

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட ரயில் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ராஜ்குமார் ஜெயந்தி (வயது -22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் என்பவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles