ரஷ்யப் படைகளின் தளபதி உக்ரைனின் தாக்குதலில் பலி!

உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளின் முக்கிய கட்டளைத் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

ரஷ்யாவின் ஏழாவது வான்வழித் தரையிறக்கப் பிரி வின் கட்டளைத் தளபதியும் மத்திய இராணுவ மாவட்டத்தின் கூட்டு ஆயுதப் படைகளது உப தளபதியுமாகிய 47 வயதுடைய மேஜர் ஜெனரல் ஆன்ட்ரே சுகோவெட்ஸ்கி (Major General Andrey Sukhovetsky) வான் வழித் தரையிறக்க முயற்சி ஒன்றின் போது சினைப்பர் சூட்டுக்கு இலக்கானார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தலைநகர் கீவுக்கு வட கிழக்கே Hostomel நகரில் நடத்தப்பட்ட தரையிறக்கத் தாக்குதலிலேயே தளபதி சிக்குண்டார் என்று
உக்ரைன் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போரில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் என்று ரஷ்யா அறிவித்த 498 படையினரில் அதி உயர் தர நிலையில்
உள்ளவர் சுகோவெட்ஸ்கியே ஆவர்.

ஆனால் சுமார் 9அயிரம் ரஷ்யப்படையின ரைத் தாங்கள் கொன்றுவிட்டதாக உக் ரைன் அரசு கூறியுள்ளது.மேஜர் ஜென ரலின் மரணத்தை ரஷ்யா முறைப்படி அறிவிக்கவில்லை. அவரது சக படைவீரர்கள் அந்தச் செய்தியை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துள்ளனர். அவர் எங்கேஎவ்வாறு உயிரிழந்தார் என்பதும் சுயாதீன செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இராணுவத்தின் வான்வழித் தரையிறக் கக் குழுக்களின் சண்டைகளில் பல சாதனைகளைப் புரிந்தவர் சுகோவெட்ஸ்கி. 2014 இல் கிரிமியா ஆக்கிரமிப்புப் போரிலும் முக்கிய பங்கு வகித்தவர். அவரது மரணம் உக்ரைன் போரில் ரஷ்யப்படைகள் சந்தித்த குறிப்பிடத்தக்கபின்னடைவு என்று கூறப்படுகிறது.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles