” எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன்.” என்று 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.
வெளியாகிய 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் முதலிடத்தை பெற்று வந்த நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
” நான் சூம் வகுப்பின் ஊடாகவே எனது படிப்பினை மேற்கொண்டேன். எனது ஆசிரியர் சிறப்பாக வழிகாட்டினார். எனது பெற்றோரும் ஊக்கமளித்தனர். பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியைபெற முடிந்தது.” என்றும் அவர் கூறினார்.










