ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளை மறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், மக்களுக்கான சில சலுகைகள் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது .










