மே 01 – காலிமுகத்திடலில் ‘மாஸ்காட்ட’ தயாராகும் பஸில்!

ஆளும் கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் பெருமெடுப்பில் நடத்துவதற்கு அக்கட்சியின் ஸ்தாபகரான நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதன்படி காலி முகத்திடம் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு மாநகரசபைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மே தின கூட்டத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளாட்சிமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதை காட்டும் விதமாக மாபெரும் கூட்டத்தை திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles