‘இடைக்கால அரசு’ -சஜித் அணி தொடர்ந்தும் மறுப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்றது.

தேசிய இணக்கப்பாட்டு அரசை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கயந்த கருணாதிலக்க ஆகியோரும் –

சுயாதீன அணிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, விமல் வீரவன்ச, உதய கம்மமன்பில, தயாசிறி ஜயசேகர, டிரான் அலஸ், நிமல் லான்சா ஆகியோர் பங்கேற்றனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை, பிரதி சபாநாயகர் தேர்வு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதவியில் கோத்தாபய ராஜபக்ச நீடிக்கும்வரை, இடைக்கால அரசில் இணைவது ஏற்புடைய விடயமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்கலாம் என்பது குறித்து கட்சி மட்டத்தில் கலந்துரையாடி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles