இ.தொ.காவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதா? ஆலமரம் ஆலமரம் என்றீர்கள். ஆலமரத்தை ஆணி வேரை தமிழ் முற்போக்கு கூட்டணி அடியோடு இல்லாமல் செய்திருக்கின்றது. 6 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த இ.தொ.காவை இப்போது இரண்டு உறுப்பினர்களோடு ஊசலாட வைத்துள்ளோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
” எந்த ஆட்சி வந்தாலும் அமைச்சர் பதவியை வாங்கிய உங்களை 4 வருடம் எதிர் கட்சியிலயே அமர வைத்து அழகுபார்த்தோம். காலம் காலமாக கேபினட் அமைச்சை வாங்கிய உங்களுக்கு இராஜங்க அமைச்சை மட்டும் வாங்க வைத்திருக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி.
வெட்டி வீராப்பு பேசும் புதிய தலைவர் செந்தில் தொண்டமானையும் இ.தொ.கா கட்சியையும் பதுளையில் படும் தோல்வி அடைய செய்து முகவரி இல்லாமல் செய்திருக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதை மறந்து விட்டு அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அத்துடன் அடுத்த தேர்தலில் மலையக மக்களின் பலம் இதொகாவுக்கு தெரியவரும். மக்களை ஏமாற்றிய அவர்கள் அரசியல் செய்த காலம் முடிந்துவிட்டது .” – என்றார்.
