தமிழரசு கட்சிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அன்று தொட்டு இன்று வரை கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் நல்ல உறவு இருந்து வருகின்றது. அதை சீர்குலைக்கும் முகமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இ.தொ.கா வை விமர்சித்துள்ளதாக பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் T.V சென்னன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமிழரசு கட்சியின் அமரர் அமிர்தலிங்கம் எதிர் கட்சியாக இருந்த காலப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களான ஐக்கிய தேசிய கட்சியினரால் அமரர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. இதன் போது அன்றிருந்த இ தொ கா வின் தலைவர் ஆமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் எதிர்த்தே வாக்களித்தார்.
அப்படியான உறவுகள் இருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் சின்னஞ்சிறு கட்சிகளின் பேச்சை கேட்டு இ தொ கா வை விமர்சித்தது மிகவும் வேதனை அளிக்கின்றது. சுமந்திரனினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவை இழந்தே வருகின்றது. இது சம்பந்தமாக தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராஜாவின் கவனத்திற்கு கொண்டு வரப்படும்.” – என்றார்.
ராமு தனராஜா
