அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு இலவச பஸ் சேவைகளை வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 20 முதல் 25 கிலோ மீற்றர் தூரம் வரை இலவச பஸ் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் இவ்வாறு இலவச பஸ் சேவைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
