சர்வதேச கொடையாளர் மாநாட்டை இலங்கையில் உடன் நடத்தவும்!

“ நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்தவும். இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தயார்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசின் தவறான – அநீதியான வரிக்கொள்கை காரணமாகவே அரச வருமானம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. தமக்கு தேவையானவர்களுக்கு வரி விலக்கு வழங்குவதற்காக தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் சர்வதேச நிறுவனங்களின் தரப்பட்டியலில் இலங்கை பின்நிலைப்படுத்தப்பட்டது. இது தொடர்பில் நாம் சுட்டிக்காட்டியபோது, வினா எழுப்பியவேளை, சர்வதேச சூழ்ச்சியென காரணம் கூறினார் கப்ரால்.வரலாற்று தவறிழைக்கப்பட்டுள்ளது என்பதை நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். நாட்டை மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயார்.

எனவே, இலங்கையில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன். அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒதுக்கி வைத்துவிட்டு அதில் பங்கேற்க தயார். அதன்மூலம் கிடைக்கும் உதவிகளை, மக்களுக்கு உரிய வகையில் சென்றடைவதற்கான பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறலும், வெளிப்படை தன்மையும் இருக்க வேண்டும்.

வெனிசூலா, லெபனானின் நிலை ஏற்படும் அல்ல, இங்கு ஏற்பட்டுவிட்டது. இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் வீடு செல்ல வேண்டும். இந்நிலைமை ஏற்படுவதற்கு அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமும் காரணம். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பதவி விலகவும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles