திஸ்ஸகுட்டியாராய்ச்சியின் வீடுமீது தாக்குதல் – பதுளையில் ஐவர் கைது!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரது வாசஸ்தலம் தாக்கி, பலத்த சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிசார் ஐந்து பேரை, இன்று கைது செய்துள்ளனர். மேலும் பலர் தேடப்பட்டும் வருகின்றனர்.

பதுளை மாவட்டத்தில் ‘மொட்டு’ சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற, பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸகுட்டியாராய்ச்சியின் வாசஸ்தலமே, தாக்கி சேதப்படுத்தப்பட்டதாகும்.

கடந்த 9ந் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பண்டாரவளை மாநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் பின்னர், அங்கு கூடிய கும்பல், மேற்படி பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்திற்கு ஊர்வலமாக சென்று, அவ் வாசஸ்தலத்தை தாக்கி, பலத்த சேதத்தினை ஏற்படுத்தியிருந்தனர்.

இச் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிசார், இன்று ஆரம்பக்கட்டமாக ஐவரைக் கைது செய்து, விசாரணைக்குற்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டும் வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர், அவர்கள், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பொலிசார் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles