பசறை சுகாதார பிரிவில் 11 பேருக்கு டெங்கு!

பசறை, சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை (10/06) பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பல்லேகமயில் இரண்டு பேரும், ஆக்கரத்தனை பகுதியில் ஒருவரும் பங்குவத்தை கமயில் ஒருவரும் தவளமண்டிய பகுதியில் ஒருவரும் பசறை நகர் பகுதியில் ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் ஜெயகுமார் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles