பொகவந்தலாவை, பொகவானை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண் டிருந்த 8 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
இவ்வனர்த்தம் இன்று17 வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
மரத்திலிருந்த குளவிகள் கலைந்து வந்து கொட்டியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளான 8 பெண் தொழிலாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
