சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதி நீடிப்பு

அண்மைக் காலமாக வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதியை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

காலாவதித் திகதிகளை நீடிப்பதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​தாங்கள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத் தடைகளை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை உருவாக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.

Related Articles

Latest Articles