மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

நல்லதண்ணி  – மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மோகினி எல்ல பகுதிகளில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடும் பணி மூட்டம் இப்பகுதியில் உள்ளன.இதனால் வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Related Articles

Latest Articles