மின்சார மயமாக்கப்படும் முச்சக்கர வண்டிகள்

300 முச்சக்கர வண்டிகளை மின்சார மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பான சட்ட பின்னணியினை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles