‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாடு ஜெனிவாவில் எதிரொலிக்கும்”

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொண்டது. அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதால் ஜெனிவா தொடரில் கடும் நெருக்கடிகளை இலங்கை சந்திக்க நேரிடும். “

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று (26) தெரிவித்தார்.

“நல்லாட்சியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரசல்ஸ் சென்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.  இதன்போது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதமும் அது நீக்கப்படும்வரை சட்டம் 0பயன்படுத்தப்படமாட்டாது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே ஜி.எஸ்.பி.  பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.” எனவும் சுமந்திரன்  சுட்டிக்காட்டினார்.

” எனினும் உறுதிமொழி தற்போது மீறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும். போராட்டக்காரர்கள்  வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் உள்ள சாதாரண சட்டம் போதுமானது. வன்முறை என்பது தவறுதான். ஆனால் எல்லா வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கையாக அமையாது குறிப்பாக தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளின் அலுவலகங்கள் தாக்கப்படும் அது பயங்கரவாத நடவடிக்கையா?” எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

போராட்டக்களத்தில் இருந்த முன்கள போராளிகள் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி வேட்டையாடப்படுகின்றனர். இது தவறான அணுகுமுறையாகும். அவசரகால சட்டத்தை மாதாந்தம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் நீடிக்க  வேண்டும். சிலவேளை 20நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்காமல் இருக்கலாம் என்பதற்காகவும் வழங்கிய வாக்குறுதியை மறந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை கையில் எடுத்துள்ளது அரசு.  என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles