ரயில் மோதி பலியானவர் அடையாளம் காணப்பட்டார்!

ஹட்டன், சிங்கமலை சுரங்கத்துக்கு அருகில் ரயில் மோதி நேற்று உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர், மஸ்கெலியா,  கிரண்டில்  தோட்ட காரியாலயத்தில் பணிபுரிந்த புஷ்பராஜ் (57) என்ற 3 பிள்ளைகளின் தந்தையாவார்.

தனக்கு புதிய வீடொன்றை வாங்குவதற்காக வீட்டை பார்வையிட சென்ற போதே ரயிலில் மோதி பலியானார்.  சம்பவம் தொடர்பான விசாரனைகளை ஹட்டன்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே நேற்று மதியம் அவரை மோதியது.

-கௌசல்யா-

Related Articles

Latest Articles