இலங்கைக்கு 2.9. பில்லியன் அ.டொ. கடன் வழங்க IMF இணக்கம்

2.9 பில்லியனர் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட இணக்கத்துக்கு வந்துள்ளது.

 

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பிரதிநிதிகள், ஜனாதிபதி உட்பட முக்கிய தரப்புகளுடன் பேச்சுகளை நடத்தினர்.

 

இதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கடன் வழங்க, ஆரம்பக்கட்ட இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

 

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு, 48 மாத காலத்துக்கே இக்கடன் வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles