திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வானில் சிக்குண்ட குழந்தை பலியான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
தந்தை வீட்டில் வைத்து திருகோணமலைக்கு திருமண வைபவத்துக்கு செல்ல உள்ள நிலையில் வானை பின்னால் எடுத்த போது அதற்குள் சிக்குண்டு மகன் பலியானதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தம்பலகாமம் நாயன்மார் திடலை சேர்ந்த வயது (02) ஆர்.நசிட்றா என பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வான் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
