இலங்கையில் இராவணனும் இல்லை; சிவ வழிபாடும் இல்லையாம்!

“இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை. சிவ வழிபாடும் கிடையாது” என்று தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, திருக்கோணேஸ்வரம் ஆலயத்திலுள்ள கடைகளைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதற்கு ஆலய பரிபாலன சபையே விரும்பும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்துக்கே எனவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்றுப் பின்னணி காணப்படுகின்றது. இராணவன் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுப்பட்டார் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால், இராவணன் என்ற மன்னன் இருந்தாரா, அவர் தமிழரா, சிவ வழிபாட்டில் ஈடுபட்டாரா என்பதற்கு எவ்வித சான்றும், வரலாறும் இல்லை.

திருக்கோணேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகின்றது. இதில் 18 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரம் கோயிலுக்குச் சொந்தமானது.

ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் சுமார் 60 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளைச் சிங்கவர்கள் வைத்திருப்பதால் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக இனவாதமாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வீதி இருமருங்கில் உள்ள கடைகளைப் புதுப்பிக்க ஆலயத்தின் நிர்வாக சபையினர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். கிழக்கு மாகாண ஆளுநர் இனவாதமற்றவர்.

திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்றுப் பின்னணியே காணப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் நான்கு தூபிகள் இருந்துள்ளன. அவற்றில் மூன்று தூபிகள் கடலை நோக்கியதாக அமைந்ததால் அது திருக்கோணேஸ்வரம் எனப் பெயர் பெற்றுள்ளது.
அத்துடன் மகாவம்சத்திலும் இவ்விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, எமக்கும் வரலாறு தெரியும். நாங்களும் குறிப்பிடுவோம்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் பாதுகாக்கின்றோம். அதுபோல் நீங்களும் குருந்தூர்மலையைப் பாதுகாக்கக் கவனம் செலுத்துங்கள். அங்கு தமிழ் அடிப்படைவாதிகளால் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles