குறி தவறியதில் உயிரிழந்த யுவதி

பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட சென்றிருந்த கொள்ளையர்கள் சிலரை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் குறி தவறியதில் பஸ்ஸில் பயணித்த யுவதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.

கொள்ளையர்கள் சிலர் தங்கோவிட்டவில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கொள்ளையர்களை முற்றுகையிட்ட போது, கொள்ளையர்கள் தாம் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் கொள்ளையர்களை பின் தொடர்ந்து சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது ஒரு துப்பாக்கி வேட்டு தவறுதலாக அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பட்டுள்ளது. குறி தவறிய இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி, அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காலி பிரதேசத்தை சேர்ந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரை அவர்கள் வத்தளை பிரதேசத்தில் கைவிட்டு சென்றுள்ளதுடன் அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு கொள்ளையர்கள் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles