இங்கிலாந்து பிரதமர் தேர்விலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்!

” இங்கிலாந்திடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த சுதந்திர நாட்டின் வழிவந்த ஒருவர் இன்று இங்கிலாந்தின் பிரதமராகியிருக்கின்றார். இதுதான் காலச்சக்கரம் என்பது . இதனை இலங்கை அரசாங்கமும் இந்நாட்டு மக்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் .” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தனது 42 வது வயதில் இங்கிலாந்தின் நாட்டின் 57 வது பிரதமராக இள வயதில் – ரிஷி சுனக், தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும். அவருடைய திறமையையும் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில் 142 உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பதும் அந்த நாடு திறமையானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை துணிச்சலாக வழங்குகின்றது.அதுவே ஜனநாயகத்தின் பண்பாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தை இலங்கை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இன்று எங்களுடைய இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவிற்கு முக்கிய காரணமே ஒரு குடும்பம் என்று சொல்லப்படுகின்றது.

இந்த நாட்டில் இனம் மதம் மொழி என எங்களை பிரித்து ஆள நிதைத்தவர்கள், அதனை செய்தவர்கள், இன்று அதற்கான பலனை அனுபவித்து வருகின்றார்கள். நாங்கள் இனத்தையும் மதத்தையும் பாரத்து வாக்களித்ததன் பயனை அனுபவிக்கின்றோம்.

எனவே, எதிர்வரும் காலங்களில் இலங்கை மக்கள் திறமையானவர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே இந்த நாட்டை இலங்கையர்களாக நாம் அனைவரும் கட்டியெழுப்ப முடியும்.

இங்கிலாந்தின் 57 வது தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷp சுனக் பிரதமருக்கு வாழத்துக்களை தெரிவிப்பதுடன் இந்திய வம்சாவளி மக்களுக்கு அவர் பெருமை சேர்த்திருப்பதையும் குறிப்பிடுவதுடன்.இங்கிலாந்தின் சிறந்த பிரதமராக அவர் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles