கல்வி தொடர்பான முடிவுகளில் அரசியல் வேண்டாம்!

கல்வித் துறை தொடர்பான கருத்துக்களை  முன்வைக்கும் போது குறுகிய அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து செயற்படுவது அவசியம் என சமகி ஜனபலவேகவின் நியமன உறுப்பினர் திரு.இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் தெரிவித்தார்.

நவீன உலகிற்குத் தேவையான நவீன பாடங்களையும் புதிய தொழில்நுட்ப அறிவையும் அடுத்த  தலைமுறைக்குக் கொடுக்கும் வகையில் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்துவது பெரும் பொறுப்பு என்றும் திரு.பக்கீர் மார்க்கர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திரு.இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles