அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடுவளை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று(06) பிறப்பித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்த இவ்விருவரும் 90 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
