தந்தை திட்டியதால் மகன் தற்கொலை! கல்லடியில் விபரீத முடிவு!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, நெச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கல்லடி, நெச்சிமுனையைச் சேர்ந்த பிரபல வைத்தியர் ஒருவரின் மகனான அகிலன் துஷ்யந்தன் (வயது 18) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயிரியல் துறையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததால் அதனைக் கேட்டு அவரின் தந்தை திட்டினார் என்றும், அதையடுத்து மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கிட்டுக் கொண்டார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தூக்கில் இருந்து காப்பாற்றப்பட்ட மாணவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles