2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நடுநிலை வகித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏனைய எம்.பிக்கள் பாதீட்டை எதிர்த்து வாக்களித்திருந்தாலும், வேலுகுமார் எம்.பி. நடுநிலை வகித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைகளின் தன்னிச்சையான மற்றும் ஏதேச்சையான செயற்பாடுகள் காரணமாகவே வேலுகுமார் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
