ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலேயே அடுத்த அரசாங்கம் அமையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் பங்காளிக்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கமும், தேர்தல் ஆணைக்குழுவுமே முடிவெடுக்க வேண்டும். அந்த வகையில் தேர்தலை நடத்துவதற்கு நாம் இணக்கம். அடுத்த அரசாங்கம்கூட மொட்டு கட்சி தலைமையிலேயே அமையும். உள்ளாட்சி சபைத் தேர்தலிலும் வெற்றி உறுதி.
நாட்டு மக்கள் ராஜபக்சக்களை வெறுக்கவில்லை. அவர்கள் நாட்டுக்கு அவசியம்.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.
