நாட்டின் நலன் கருதியும், நாட்டை மேம்படுத்துவதற்காகவும் மொட்டு கட்சி அல்ல எந்த தரப்புடனும் கூட்டணி வைக்க தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நேற்று அறிவிப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் இன்று வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
