நாட்டில் இனிவரும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிட எதிர்பார்த்துள்ளதுடன், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்போம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘நாட்டில் தற்போது ரணில் – ராஜபக்ச அரசாங்கமே இருக்கின்றது. இரு தரப்பும் அனுபவம் வாய்ந்த இரு அணிகள் என்பதால் கூட்டணி அமைப்பில் பிரச்சினை இருக்காது. தற்போது பல கட்சிகளை இந்த கூட்டணியில் இணைத்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது தங்களுடைய கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயாராக இருப்பதுடன், தேர்தலிலும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது’ என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
