‘வருமானம் இல்லையாம்’ – ரூ. 10 கோடி திரட்ட நிதியம் அமைக்கிறார் மைத்திரி!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக நிதியமொன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி, நட்டஈட்டை செலுத்தும் திறன் தமக்கு இல்லாததால் மக்களிடம் பணம் வசூலிக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில்,

“10 கோடி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 10 கோடி கொடுக்க எனக்கு பண பலம் இல்லை. மக்களிடம் 10 கோடி வசூலிப்பேன் என்று நம்புகிறேன்.

என்னிடம் மோட்டார் சைக்கிள் கூட இல்லை. எல்லா இடங்களிலும் பணம் வசூலிக்க வேண்டும். நான் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நான் சிறைக்கு செல்வேன்.

நாங்கள் சகோதரர்களாக இருந்தாலும் டட்லி சிறிசேனவின் தொழிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் குடும்பத்தில் 11 பேர் உள்ளோம்.

எனது தந்தைக்கு 05 ஏக்கர் நெற்பயிர்களும் 03 ஏக்கர் காணியும் இருந்தது. அந்த 5 ஏக்கர் காணி எனது சகோதரிகளுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அந்த மூணு ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். வேற வருமானம் இல்லை…” என்றும் அவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles