‘மின் கட்டணம் அதிகம் – ‘அயன்’ பண்ணாதே எனக் கூறிய தாய்மீது தாக்குதல்! மகன் கைது!!

மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் தனது வீட்டில் ஆடைகளை ‘அயன்’ பண்ணக்கூடாது என தெரிவித்த 66 வயது தாயின் தலைமயிரைப் பிடித்து தாக்கிய 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்த, ஓமத்த பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பஸ் சாரதியான சந்தேக நபரின் வீட்டில் மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமது சேர்ட், காற்சட்டைகளை ‘அயன்’ செய்வதற்காக அருகிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நாட்களில் மின்சாரக் கட்டணம் பெருந்தொகையாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமது வீட்டில் அயன் செய்ய வேண்டாமெனவும் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதால்
வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வயதான அந்த தாய் மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன் தலை மயிரை பிடித்து கொடூரமாக தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான தாய் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரான மகனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles