ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விலகியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளர் மற்றும் பசறை தொகுதி அமைப்பாளர் ஆகிய பதவிகளையே வடிவேல் சுரேஷ் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு, பசறை லுணுகலையில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று வடிவேல் சுரேஸால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மக்களும் காலை முதல் கூட்டம் நடைபெறும் இடத்தில் காத்திருந்தனர். எனினும், சஜித் வரமாட்டார் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. திடீர் சுகயீனமே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும், வெளிமடை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பங்கேற்றுள்ளார் எனவும், இதனால் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் மக்கள் ஏமாற்றப்பட்டமை ஆகியவற்றை கருதியே வடிவேல் சுரேஷ் இந்த முடிவை எடுத்துள்ளார்.










