வெளிமடையில் காட்டுத் தீ – 12 ஏக்கர் நாசம் – விமானப்படை களமிறக்கம்!

வெளிமடை, கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இதனால் வனப்பகுதி சுமார் 12 ஏக்கர் எரிந்து நாசமடைந்துள்ளது.

இன்று காலை 6 மணியளவிலேயே காட்டு தீ பரவ ஆரம்பித்துள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக தியத்தலாவை விமானப்படை முகாமில் இருந்து சுமார் 40 விமான படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles