மார்ச்சில் அமைச்சரவை மாற்றம்! மேலும் 10 பேருக்கு அமைச்சு பதவிகள்?

எதிர்வரும் மார்ச் மாதம் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதெனவும், இதன்போது புதிதாக 10 பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

உத்தேச அமைச்சரவைப் பட்டியலில் காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,ரோகித்த அபேகுணவர்தன, எஸ். எம். சந்திரசேன, ஜனக்க பண்டார தென்னகோ, சரத் வீரசேகர ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.

தனக்கு வழங்கப்படும் அமைச்சை வைத்து, சிறப்பாக செயற்படும் ஆளுமை தனக்கு உள்ளது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles