தந்தையொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை புகட்டி தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மூன்று பிள்ளைகளும், தந்தையும் கம்பளை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கம்பளை, தெல்பிட்டிய செவனக் கிராம பகுதியைச் சுர்ந்த 4 வயது ஆண் பிள்ளையும் , 7 மற்றும் 13
வயதுகளுடைய பெண் பிள்ளைகளும் தந்தையான 40 வயது நபருமே நஞ்சருந்திய நிலையில் வைத்திய சிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கணவன், மனைவிக்கிடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும் சம்பவதினம் மனைவி வீட்டிலிருந்து வெளியேறி இருந்ததாகவும் விசாரணைலிருந்து தெரிய வந்துள்ளது .
சம்பவதினம் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த குறித்த நபர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் தெரியாமல் இனிப்பு குளிர் பானத்தில் நஞ்சை கலந்து வழங்கியுள்ளார். பின்னர் தனது அறைக்குச் சென்று மது பானத்துடன் நஞ்சை கலந்து அருந்தியுள்ளாதாக தெரியவருகிறது.
இந்நிலையில் தனது தந்தை, தம்பி, தங்கை ஆகியோர் தொடர்ந்து வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை அவதானித்த 13 வது சிறுமி இது குறித்து அயலில் வசித்த தனது பெரியப்பாவிடம் (தந்தையின் அண்ணன்) தெரிவித்ததையடுத்து பிரதேச வாசிகளுடன் இணைந்து நால்வரையும் கம்பளை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
பிள்ளைகளுக்கு நஞ்சை அருந்த கொடுப்பதற்கு முன்னர் முன்பு எடுத்த பழைய புகைப்படங்களை குறித்த நபர் வெகு நேரமாக பார்த்து கொண்ருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கம்பளை நிருபர்
