நானுஓயாவில் இன்று அதிகாலை ரயில் மோதி குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார்.
நானுஓயா, கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லதுரை சிறிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில் மோதியே குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.
நானுஓயா ரயில் நிலையத்திற்கு முன்பாகவே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சடலம் மீட்கப்பட்டு தற்போது நானுஓயா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ள இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ,திவாகரன்










