சீனாவுக்கு அனுப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் குரங்குகளை தமது பகுதியில் இருந்து பிடிக்குமாறு கேகாலை மாவட்ட விவசாயிகள், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 8 லட்சம் பேர் வாழும் நிலையில், அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் இருப்பதாகவும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீடுகளில் சமைத்த உணவுகளை பாத்திரத்துடன் குரங்குகள் தூக்கி செல்லும் நிலை காணப்படுவதுடன், அங்கு உணவு பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரியவந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சீனாவுக்கு அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ள குரங்குகளில், பெரும்பாலானவற்றை தமது பகுதிகளில் இருந்து பிடிக்குமாறு விவசாயிகள் கோரியுள்ளனர்.
