அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவேந்தல் கண்காட்சி – இ.தொ.கா. விடுத்துள்ள கோரிக்கை

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மூன்றாவது சிரார்த்த தினத்தையொட்டி எதிர்வரும் மே 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை கொழும்பு சௌமியபவனில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. தேசிய தலைவரது ஆளுமையை இளைய தலைமுறையினரும் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் கண்காட்சி ஒன்று இடம்பெற உள்ளதாக இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

இக்கண்காட்சியில் அமரர் பயன்படுத்திய பொருட்கள் அவரது நினைவுகளின் நிழல்களாக விளங்கும் புகைப்படங்கள், விருதுகள், வரலாற்று பதிவுகளாக திகழும் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

இக்கண்காட்சியை பயனுள்ள வகையில் மிக பிரமாண்டமாக நடத்தவிருப்பதால் எமது மக்களும் தமது பங்களிப்பினை வழங்க வாய்ப்பளிக்க விரும்புகின்றோம். எனவே, உங்களிடம் அமரர் ஆறுமுகன் தொண்டமான் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், கடிதங்கள், குறிப்புக்கள் ஏதேனும் இருப்பின் அனுப்பி வைக்கவும். அவைகள் உங்கள் பெயர் விபரங்களுடன் கண்காட்சியில் இடம்பெறும். அமரரின் நினைவேந்தலை அர்த்தமுள்ளதாக அனைவரும் உள்வாங்கிக்கொள்ள கை கோர்ப்போம். விபரங்களுக்கு சிரேஷ்ட ஊடக இணைப்பாளர், 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07. மே 06ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியதாக cwcmedia72@gmail.com மற்றும் congressnewspaper@gmail.com ஆகிய மின் அஞ்சல் முகவரியூடாகவும், 071-9455222 என்ற வட்ஸ்எப் மற்றும் நேரடி அவசர தேவைகளுக்கு 071-6876548 / 070-4329131 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளவும்.

Related Articles

Latest Articles