தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாரம் நூலொன்றை வெளியிட்டார். காலி முகத்திடல் போராட்டத்தை மையப்படுத்தியதாக எழுதப்பட்டுள்ள அந்த நூலுக்கு ‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என பெயரிடப்பட்டுள்ளது.
நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் பிரமுகர்களுக்கு அப்பால், தனக்கு தரம் 5 முதல் 10வரை கல்வி கற்பித்த அக்ஷரா டீச்சரையும் விமல் அழைத்திருந்தார். அழைப்பையேற்று அவரும் அங்கு வந்திருந்தார்.
விழாவில் உரையாற்றிய விமல், “ எனது ஆசிரியரும் வந்துள்ளார். போராட்டத்தின் ஆரம்பத்தில் அவரும் கோல்பேஸ் பக்கம் சென்றவர்தான். போகும்போது எனக்கு சொல்லவில்லை. போய் வந்த பின்னரே அது பற்றி தெரியப்படுத்தினார். அவருக்கு நான் எதுவும் சொல்லப்போகவில்லை. சிலவேளை, மாணவர்களாலும் ஆசிரியர்களுக்கு கற்பிக்க முடியும்.” – எனக் குறிப்பிட்டார்.
நூல் வெளியீட்டு விழா முடிந்த பின்னர் விமலிடம் வந்த அக்ஷரா டீச்சர்,
“ விமல் நீங்கள் சொன்னது சரிதான், இன்று உங்களிடம் பல விடயங்களை கற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.” என சிரித்தப்படியே கூறினாராம்.
