குளவிக் கொட்டு: நோர்வூட் பகுதியில் 11 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்பி தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 11பேர்  குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேயிலைத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று தாக்கிய நிலையில் குளவிகள் இவ்வாறு அதிலிருந்து வெளியே வந்துள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகவும், மேலும் 3 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles